தலைமுடி அடர்த்தியாக வளர சில வழிமுறைகள்!!

 


எலிவால் போன்று காட்சியளிக்கும் முடியை அடர்த்தியாக்கும் சில இயற்கை வழிகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.


 ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு கலந்து, பின் அதை தலைச்சருமம் மற்றும் தலைமுடியில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி இவற்றில் ஏதேனும் ஒரு வழியை வாரத்திற்கு ஒன்று அல்லது இரடு முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி வலிமையாவதோடு, அடர்த்தியாகவும் இருக்கும். 


ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைச்சருமம் மற்றும் முடியில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். 


ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம் அல்லது அதன் சாற்றினை தலைமுடி மற்றும் தலைச்சருமத்தில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலசலாம். 


கற்றாழை ஜெல்லை நேரடியாக தலைமுடி மற்றும் தலைச்சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, அலசி வந்தால், தலைமுடி வலுவாவதோடு, விரைவில் அடர்த்தியாகும். வேண்டுமானால் கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலையும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த முறையை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பின்பற்றினால் விரைவில் நல்ல பலனைக் காணலாம்.


 ஒரு அவகேடோ பழத்தில் உள்ள கூழ் பகுதியுடன் ஒரு டேபிள் பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் தலைச்சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி அவகேடோ பழத்தை வாரத்திற்கு 2 முறை தலைக்கு பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.