ஒலிம்பிக் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள ரோஜர் பெடரர்!!

 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதை போட்டி அமைப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்தின் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் வலியுறுத்தியுள்ளார்.


சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்கும் ஜெனீவா ஓபின் டென்னிஸ் போட்டியில் களம் இறங்க இருக்கும் ரோஜர் பெடரர் அதன் பிறகு பிரெஞ்ச் ஓபினிலும் கலந்து கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார்.


எல்லாவிதமான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றிருக்கும் 39 வயதான பெடரருக்கு இன்னும் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் மட்டும் எட்டாக்கனியாக உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஓகஸ்டு 8 வரை ஒலிம்பிக் போட்டியை நடத்த ஏற்பாடு நடந்து வரும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக பல டென்னிஸ் பிரபலங்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.


சமீபத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெடரர் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒலிம்பிக்கில் பங்கேற்று சுவிட்சர்லாந்துக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே விருப்பம். இது என்னை பெருமையடைய செய்யும் ஒரு விஷயம். ஆனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா, இல்லையா? என்பதை வீர வீராங்கனைகள் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதைப் போட்டி அமைப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.


ஜப்பானில் ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் கூட ஒலிம்பிக் போட்டி நடக்கும் என்றே நினைக்கிறேன். ஒரு வேளை தற்போதைய நிலைமையில் அது நடக்காவிட்டால் அதைப் புரிந்து கொள்ளக்கூடிய முதல் நபராக நான் இருப்பேன். கடினமான நிச்சயமற்ற ஒரு தன்மை நிலவுகிறது என்பதை நாங்கள் அறிவோம். ஒரு வீரராக ஒலிம்பிக் போட்டிக்கு பயணிப்பது குறித்து நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். டோக்கியா ஒலிம்பிக்குக்கு செல்ல நிறைய எதிர்ப்பு இருப்பதாக உணர்ந்தால், அங்கு போகாமல் இருப்பதே நல்லது.


என்னைப் பொறுத்தவரை ஒலிம்பிக்கில் பங்கேற்பேனா, இல்லையா? என்பது தெரியாது. இரண்டு விதமான மனநிலையில் நான் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


பெடரர் மட்டுமின்றி, ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகிய டென்னிஸ் பிரபலங்களும் கொரோனா அச்சம் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஒலிம்பிக்கில் விளையாடுவது குறித்து தாம் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.