குழந்தை இழந்த துயரில் உயிரை மாய்த்து கொண்ட கணவன் - மனைவி!!

 


குழந்தை பிறந்து 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரை மாய்த்த சோக சம்பவம் யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.  


சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது துணைவி ரஜிதா (வயது-33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்தனர். குடும்பத்தலைவர் நேற்று மாலை நகை வேலைக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை உட்கொண்டுள்ளார்.


அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனை அறிந்த துணைவி அதே இராசயத்தை உட்கொண்டுள்ளார்.


அதனால் அவரது உயிரும் பிரிந்தது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்து வந்துள்ளார்.


இதேவேளை குறித்த தம்பதிக்கு நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத நிலையில்,  அண்மையில் குழந்தை பிறந்தாகவும், பிறந்த குழந்தை 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத தந்தை நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் அதே நஞ்சை அருந்தி குழந்தையின் தாயும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.