மேலும் ஒரு வாரம் டெல்லியில் முழு ஊரடங்கு நீடிப்பு!

 


டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


டெல்லியில் கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், கொரோனா தொற்று குறையத் தொடங்கினாலும் அது 5 சதவிகிதத்தைவிட இன்னும் குறையவில்லை என்பதால் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் கெஜ்ரிவால், கடந்த சில தினங்களாக கொரோனா கட்டுப்பாட்டில் கிடைத்த வெற்றியை உறுதி செய்யும் வகையில் அடுத்த திங்கட்கிழமை வரை ஊரடங்கை நீடிப்பதாக தெரிவித்தார்.


டெல்லியில் ஏப்ரல் மாதம் 35 சதவிகிதமாக இருந்த வைரஸ் தொற்று, தற்போது 11.32 சதவிகிதமாக குறைந்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.