வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுனர் மீது வழக்கு!!

 


யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் முன்னாள் அத்தியட்சகர் த.குகதாசன், தன்னை அந்த பதவியிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என குறிப்பிட்டு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு ஆளுனர் உள்ளிட்ட குழுவினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்நிலையில் மருத்துவ அத்தியட்‌சகருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்‌ தொடர்பில்‌ விசாரணை செய்வதற்கு புதிய விசாரணைக்‌ குழுவை வட மாகாண சுகாதார அமைச்சின்‌ செயலர்‌ நியமித்‌துள்ளார்‌. பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின்‌ அத்தியட்சகராகக்‌ கடமையாற்றிய த.குகதாசன் கடந்த ஆண்டு ஏப்ரல்‌ மாதம்‌ 14ஆம்‌ திகதி வட மாகாண சுகாதார சேவைகள்‌ பணிப்பாளரால்‌ பணி இடைநிறுத்தப்பட்டதுடன் அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டருந்தன.


இது தொடர்பில்‌ விசாரணை நடத்துவதற்‌காக கடந்த ஆண்டு ஏப்ரல்‌ மாதம்‌ 1ஆம்‌.திகதி விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. யாழ் போதனா மருத்துவமனை மருத்துவ நிபுணர்‌ எஸ்‌.பிரேமகிருஸ்ணா தலைமையில்‌ அமைக்கப்பட்ட அக்‌ குழுவில்‌, வடமாகாண சுகாதார அமைச்சின்‌ மூத்த உதவிச்‌ செயலர்‌ எஸ்‌.பிரணவநாதன்‌, யாழ் போதனா மருத்துவமனையின்‌ பிரதிப்‌ பணிப்பாளராக இருந்த எஸ்‌.சிறிபவானந்தராஜா ஆகியோர்‌ உள்ளடக்கப்பட்டிருந்தனர்‌.


குறித்த‌ குழுவின்‌ அறிக்கை வடக்கு மாகாண சுகாதாரத்‌ திணைக்களத்‌துக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம்‌ 2ஆம் திகதி கிடைக்கப் பெற்றிருந்தது. அந்த விசாரணை அறிக்கையில்‌ பரிந்துரைகள்‌ எவையும்‌ முன்வைக்கப்படவில்லை. அதேவேளை, அவரை மீளவும்‌ பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின்‌ அத்தியட்சகராக நியமித்தால்‌ முரண்‌பாடுகள்‌ அதிகரிக்கக்கூடிய சூழல்‌ காணப்‌படுகின்றதாக குறித்த‌ குழு விசாரணை அறிக்கையில்‌ குறிப்பிட்டுள்ளனர்‌.


அத்துடன் வாகனத்துக்குரிய கொடுப்பனவையும்‌ மருத்துவ அத்தியட்சகர்‌ பெற்றுக்கொண்டு அதற்கு மேலதிகமாக அம்‌புலன்ஸ்‌ பயன்படுத்தியமை ஆதாரபூர்வமாக சந்தேகத்து இடமின்றி நிரூபிக்கப்பட்‌டுள்ளதனால் , மருத்துவ அத்தியட்சகர்‌ பணம்‌ மீளச்‌ செலுத்த வேண்டும்‌ என்றும், அதனைச்‌ செலுத்தாதவிடத்து அவருக்கு எதிராக முறையான நடவடிக்கையை திணைக்களத்‌ தலைவர்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்றும் விசாரணையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் இதுவரை பணம்‌ மீளச்‌ செலுத்தப்‌படவில்லை என்பதுடன்‌ விசாரணைக்‌.குழுவால்‌ குற்றச்சாட்டுப்‌ பத்திரமும்‌ முன்‌வைக்கப்படவில்லை. இந்த நிலையில்‌ விசாரணைக்‌ குழுவின்‌ அறிக்கையை தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டத்தின்‌ ஊடாகப்‌ பெற்றுக்கொண்ட மருத்துவ அத்தியட்சகர்‌, ‌ கடந்த ஏப்ரல்‌ மாதம்‌ 29ஆம் திகதி யாழ்ப்பாணம்‌ மேல்நீதிமன்றில் வழக்குத்‌ தாக்கல்‌ செய்துள்‌ளார்‌.


வழக்கின்‌ பிரதிவாதிகளாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌, விசாரணைக்‌ குழுவின்‌ தலைவர்‌ மருத்துவ நிபுணர்‌ எஸ்‌.பிரேமகிருஸ்ணா, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின்‌ செயலர்‌, வடக்கு மாகாண பிரதம செயலர்‌, வட மாகாண ஆளுநர்‌ ஆகியோர்‌ குறிப்பிடப்பட்டுள்ளனர்‌. இதற்கிடையில்‌, பருத்தித்துறை ஆதார மருத்துவமனை அரசமருத்துவ அதிகாரிகள்‌ சங்கத்தால்‌, மேற்படி மருத்துவ அத்‌தியட்சகருக்கு எதிராகப்‌ பல்வேறு குற்றச்‌சாட்டுக்கள்‌ சுமத்தப்பட்டு மாகாண ஆளுநருக்கு கடிதம்‌ அனுப்பி வைக்கப்‌பட்டிருந்தது.


அதற்கு அமைவாக மாகாண சுகா.தார அமைச்சின்‌ செயலரால்‌, ஏப்ரல்‌ மாதம்‌ 29ஆம்‌ திகதி மூவர்‌ அடங்கிய புதிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்‌ளதுடன், யாழ் மாவட்ட மேலதிக மாவட்‌டச்‌ செயலர்‌ சு.முரளிதரன்‌, வடக்கு மாகாண சுகாதார சேவைகள்‌ பிரதிப்‌ பணிப்பாளர்‌ மருத்துவர்‌ க.நந்தகுமாரன்‌, வடக்கு மாகாண சுதேச மருத்துவத்‌ திணைக்களத்தின்‌ கணக்காளர்‌ திருமதி சி.கவிதா ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்‌.


இந்தக்‌ குழு மருத்துவ அத்தியட்சகருக்கு எதிரான விசாரணைகளை ஆரம்‌பித்துள்ளது. வடக்கு சுகாதாரத்துறை “அரசியலும்“ இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாக, இந்த விடயம் ஆரம்பித்த போது விமர்சனம் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.