உடலில் ஒக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள்!!

 


மனித உடலில் ஓடும் இரத்தத்தில் போதுமான அளவு ஒக்ஸிஜன் இருந்தால் தான், உடலுறுப்புக்கள் சிறப்பாக இயங்கும்.


ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால், அது பதற்றம், தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், வெளிரிய தோல், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.


எனவே ஒவ்வொரும் சரியான முறையில் ஆக்ஸிஜன் பராமரிப்பது அவசியமானதாகும். அதற்கு ஒரு சில இயற்கை உணவுகள் உதவுகின்றது.


அந்தவகையில் ஆக்சிஜனின் அளவை நம் உடலில் அதிகரிக்கச் செய்வதற்காக என்னென்ன உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தற்போது இங்கே பார்ப்போம்.


உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க நினைத்தால், தினமும் கட்டாயமாக ஆப்பிளை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


எலுமிச்சையை நம்முடைய தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும்.​


பேரிக்காய், உலர் திராட்சை, கிவி இந்த பழங்களிலும் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்கும் தன்மை மிக அதிகம். இந்த உணவுகள் இரத்தத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்


பப்பாளி, தர்பூசணி இந்த உணவுகளும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். இந்த பழங்களில் வைட்டமின்களும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளது. செரிமானத்தின் போது காரத்தன்மையை உருவாக்கும். குடலை சுத்தம் செய்யும்.


குடைமிளகாயில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் அதிகம் உள்ளது. இது நம்முடைய உடலில் ஆக்சிஜன் அளவை கடகடவென உயர்த்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.


கடல் சிப்பி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஈரல், சூரை, சால்மன் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உடலின் ஆக்சிஜன அளவை அதிகரிக்கச் செய்வதில் கடல் உணவுகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.


அன்றாட உணவில் தானியங்களை ஒருவர் சேர்த்து வந்தால், நிச்சயம் அவர்களது உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும். எனவே உங்கள் உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க தானியங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


பருப்பு வகைகளான பட்டாணி, உலர்ந்த பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்றவை உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்கச் செய்யும். அதோடு நமக்குத் தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஆகியவையும் கிடைக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.