செந்தில் - ஸ்ரீஜா வீட்டில் சூப்பர் விசேஷம்!!

 


சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் புகழ் பெற்று தற்போது தொலைக்காட்சி தொடர்களின் முன்னணி நடிகராக இருக்கும் செந்தில் வீட்டில் சூப்பர் விசேஷம் ஒன்றும் நடந்துள்ள நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


ரேடியோ மிர்ச்சியில் விஜேவாக பணிபுரிந்த செந்தில் அதன்பின் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்தார். இந்த தொடரின் மூலம் அவர் பிரபலமானது மட்டுமின்றி அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகப்பெரிய அளவில் சின்னத்திரை உலகில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமணத்திற்கு பின்னரும் செந்தில்-ஸ்ரீஜா இணைந்து ஒரு சில சீரியல்களில் நடித்தார்கள் என்பதும் தெரிந்ததே.


இந்த நிலையில் ஸ்ரீஜாவின் தங்கைக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. அவரது சொந்த ஊரில் நடந்த இந்த திருமணம் குறித்த புகைப்படங்களை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். திருமணம் நடக்கும் போது கொரோனா வைரஸ் தடுப்பு நிபந்தனைகள் பல இருந்ததாகவும் அந்த நிபந்தனைகளை கடைபிடித்து இந்த திருமணத்தை வெற்றிகரமாக நடத்தியதாகவும் செந்தில் தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.