காலி பட்டதுவ பகுதியில் மதுபானம் என அசிட்டை குடித்தவர் உயிரிழந்துள்ளார்!

 


காலி பட்டதுவ பகுதியில் மதுபானம் என நினைத்து பாரவூர்தியின் மின்கலத்திற்கு (பற்றரி) விடும் அசிட்டை குடித்தவர் உயிரிழந்துள்ளார்.


 இதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 53 வயதான நபரே உயிரிழந்தவராவார்.

 குறித்த நபர் அப்பகுதியில் உள்ள வாகன திருத்தகம் (கராஜ்) ஒன்றின் உரிமையாளர் ஆவார். இங்கு மூவர் பற்றிக்குஎன அசிட் கொண்டு வந்திருந்தனர். அத்துடன் சட்டவிரோத மதுபானத்தையும் கொண்டு வந்துள்ளார்கள்.


 இதன்போது அவர்கள் மூவருடனும் உரிமையாளர் சேர்ந்து வாகன திருத்தகத்தில் வைத்து மது அருந்தி உள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் , மேலுமொரு மது போத்தலை எடுத்து மது வருந்துவதாக நினைத்து , அசிட் போத்தலை திறந்து அதனை அருந்தியுள்ளார். இதனால் அதனால் அவர் உயிரிழந்துள்ளார். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.