யாழில், திருச்சி சிறப்பு முகாமிலுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78 இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் தங்களது வீடுகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(புதன்கிழமை) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு குறித்த போராட்டமானது தமது உறவுகளை விடுதலை செய்யும் வரை தொடரும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை