வடகொரியா மக்களுக்கு கடும் உணவுப் பஞ்சம்

 


வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

வடகொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே இராணுவ இரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும் போதும் கூட அங்குள்ள தொற்று நிலவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்குத் தெரிவதில்லை.

இந்நிலையில், வடகொரியாவில் உணவுப் பஞ்சம் நிலுவதாகத் தகவல்கள் கசிந்தன. இதையும் வடகொரியா மறைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாக வெளியான தகவலை ஜனாதிபதி கிம்மே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன் நிமித்தமாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் தொடங்கி அக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும்” என எச்சரித்துள்ளது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் அண்மையில் அந்நாட்டு உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், வடகொரிய மக்களின் உணவு நிலைமை மிகவும் கவலைக்குரிய வகையில் இருக்கிறது என்றார். வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் உற்பத்தி இலக்கை எட்டமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.3300.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.