தமிழ் வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் இலங்கை காவல்துறை

 


கோவிட்டினால் பாதிக்கப்பட்ட யாழ் மீன் வியாபாரிகளிடம் இலங்கை காவல்துறையினர் மிரட்டி பணம் பறித்து வருவதாக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் பயணத்தடைகளால் பெருமளவான தமிழ் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். மீன் மற்றும் மரக்கறி வியாபாரிகள் சில பகுதிகளில் தமது வியாபாரங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கோப்பாய் பகுதியை சேர்ந்த காவல்துறையினர் சில பகுதிகளில் வியாபாராம் செய்ய வேண்டுமானால் தமக்கு பணம் தரவேண்டும் என நெருக்கடியில் தவிக்கும் மீன் வியாபாரிகளை மிரட்டி வருகின்றனர்.

குறிப்பிட்ட பகுதி ஓன்றில் மீனை விற்பனை செய்வதற்கு காவல்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் பணம் பெற்ற பின்னர் அனுமதித்தார் ஆனால் அதன் பின்னர் என்னை அணுகிய மற்றுமொரு காவல்துறை அதிகாரி மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதாக மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அந்த பிரதேச அதிகாரிகளிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனோ நெருக்கடியில் வாழும் தமிழ் மக்களிடம் இலங்கை காவல்துறையினர் பலவந்தமாக பணம் பறிப்பது தமிழ் இனம் மீதான தொடர் வன்முறையாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.