ஆராய இலங்கை வந்தது ஐ.நா. குழு


‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்தின் சுற்றாடல் தாக்கங்களை ஆராய்வதற்கான ஐ.நா. சுற்றாடல் திட்ட குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஐ.நா. சுற்றாடல் திட்டத்தின் 4 விசேட நிபுணர்களை உள்ளடக்கிய குழுவே கப்பல் விபத்தின் சுற்றாடல் தாக்கங்களை ஆராயும் களப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

ஐ.நா. சுற்றாடல் திட்ட குழு சேத மதிப்பீடு மற்றும் மீட்புக்கான செயன்முறைகளில் இலங்கைக்கு உதவவுள்ளது என அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

குறித்த குழு நேற்று உஸ்வடகெய்யாவ கடற்கரையில் களப் பயணம் மேற்கொண்டது.

அமைச்சர் நாலக கொடஹேவா உட்பட இலங்கை அதிகாரிகளுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்றையும் குறித்த குழு நடத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.