சிங்கப்பூருக்கு தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள்!
வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் பல தமிழக இளைஞர்கள் தங்களது குடும்ப வறுமையை போக்க மற்றும் தங்களது வாழ்க்கை தரம் மேம்பட வெளிநாடுகள் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பலரும் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் தவிர்த்து வருகின்றனர் இந்த விடயம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.ஆனால் அவர்களின் அடுத்த முடிவாக வெளிநாடு தான் உள்ளது,அங்கே சென்றால் குடும்ப வறுமையை போக்க முடியும் என்ற எண்ணத்துடன் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
அவ்வாறு செல்லும் இளைஞர்கள் பலர் சிங்கப்பூர்,மலேசியா,கத்தார்,குவைத்,துபாய், ஓமன்,பஹ்ரைன், போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.
அவ்வாறு வெளிநாட்டிற்கு செல்ல நினைக்கும் இளைஞர்கள் பலர் குறிப்பாக சிங்கப்பூர் செல்ல நினைக்கின்றனர்.
சிங்கப்பூர் சென்றால் அதிகமான ஊதியம் கிடைக்கும் எனவும் நம் குடும்பம் நல்ல நிலைக்கு வரும் என நினைக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு எல்லாம் பெரிய தடையாக உள்ளது பணம் தான்..
தங்களது
வாழ்க்கை தரம் மேம்பட பணத்தை சம்பாதிக்க வெளிநாடு செல்லும் இவர்களுக்கு
தமிழகத்தில் இருந்து அங்கே செல்வதற்கு பெரும் தொகை செலுத்தி செல்ல வேண்டிய
சூழ்நிலை உள்ளது.
சிங்கப்பூர் செல்லும் பலரும் 4 இலட்சம் ரூபாய் கட்டி தான் செல்கின்றனர்.
அவ்வாறு செல்பவர்களுக்கு இரண்டு வருடம் ஒப்பந்தம் தான் முதலில் போடப்படுவதாக கூறப்படுகிறது
இவ்வளவு தொகை செலுத்தி செல்ல சிலர் தயங்குகின்றனர்.
சிலர் கடன் வாங்கி அந்த தொகையை செலுத்தி செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் பலர் கூட உழைப்புக்கு ஏற்ற ஊதியம் எங்களுக்கு கிடைப்பது இல்லை என்று புலம்புகின்றனர்.
இங்கே இருந்து செல்லும் போது முகவர்கள் நல்ல ஊதியம் கிடைக்கும் என கூறி வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால் அங்கே குறைந்தளவு ஊதியமே வழங்கப்படுகிறது என தற்போது புலம்புகின்றனர்.

பெரும் தொகை கட்டி செல்லுவதால் கடன் வாங்கி சென்றவர்கள்,அந்த கடனை
அடைக்கவே ஒரு வருடத்திற்கு மேல் வேலை பார்க்க வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
அப்போது தான் வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் செலுத்த முடியும்.
இலங்கையை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில் கட்டுமான துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு தூங்க கூட நேரமில்லை என்று புலம்புவதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த சிலர் நல்ல ஊதியம் வாங்குவதாகவும் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏரளாமானோர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் நிலையில்,அவர்கள் சொந்த ஊர் மற்றும் குடும்பத்தை விட்டு அங்கே வாழும் வாழ்க்கை என்பது அவர்களின் அடுத்த தலைமுறை நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கமே.
வெளிநாடுகளில் வாழும் அனைத்து உறவுகளும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் வேலை செய்ய வேண்டும்.சமீப காலங்களில் அதிகமான விபத்துகள் பணிபுரியும் இடங்களில் நிகழ்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை