21 இலட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு!!

 


கொரோனா காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 21 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிவாரண நிதியை வழங்கும் நடவடிக்கை இவ்வாரம் முதல் முன்னெக்கப்படும் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கல் குறித்து வினவிய போது அவர் இதனைத் தெரிவித்தார். நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்படுத்தியுள்ளது.

கொவிட் வைரஸ் முதலாம் அலை ஏற்பட்ட போது மூன்று மாத காலமாக நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்த போது சுமார் 50 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதே போன்று இரண்டாம் அலையின் போது பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்ட 50 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 25 பில்லியன் நிதியும், கடந்த ஏப்ரல் மாதம் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட 30 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 12 பில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளன.

புதுவருட கொவிட் கொத்தணி தாக்கத்தினை தொடர்ந்து சமுர்த்தி பயனளார்கள் , மற்றும் தெரிவு செய்யப்பட்ட 60 இலட்சம் குடுமபங்களுக்கு நிவாரணம் வழங்க 30 பில்லியன் நிதி முதற்கட்டமாக ஒத்துக்கிடப்பட்டது. 5,000 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் நாடுதழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

சுமார் 30 இலட்சம் குடும்பங்களுக்கு இதுவரையில் 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுவருட கொவிட் கொத்தணி பரவல் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் சமுர்த்தி பயனாளர்கள் தவிர்ந்த குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட தரப்படுத்தலின் பிரகாரம் சுமார் 21 இலட்சம் குடும்பங்கள் இந்நிதியை பெற தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.