அழகு நிலையத்தில் புகுந்து அடாவடி - மூவர் கைது!!

 


அழகு நிலையத்திற்குள் நுழைந்து பெண்ணின்  ஒருவரின் தலைமுடியை கத்தரித்த குற்றச்சாட்டில் 3 பெண்களை பாணந்துறை வடக்கு பொலிசார் கைது செய்தனர்.

பிரபல சிங்கள மேடை மற்றும் திரைப்பட நடிகை ஒருவரின் மகளின் தலைமுடியே இவ்வாறு வெட்டப்பட்டுள்ளது. நேற்றையதினம் இந்த சமபவம் இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர்களை தலா 100,000 ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், அவரது 17 வயது மகள் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த 53 வயதான நடிகை பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய பெண்களில் ஒருவரின் கணவருடன் உறவு வைத்திருப்பதால் இந்த விபரீதம் நடந்தது. மொரட்டுவ, எகொட உயன பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் என கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அழகு நிலையத்திற்குள் நுழைந்து, அழகு நிலைய பெண்ணை தாக்கி, அவரது நீண்ட முடியை கத்தரித்துள்ளனர்.

சம்பவம் நடந்தபோது, அழகு நிலைய பெண்ணின் சட்டபூர்வ கணவரும், 2 பிள்ளைகளும் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று பிற்பகல் வெட்டப்பட்ட முடி மற்றும் கிழிந்த உடையுடன் அந்த பெண் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்   மருத்துவமனையில் அனுமதிக்க விரும்புவதாக புகார் தெரிவிக்கப்பட்டதால், தடயவியல் மருத்துவ படிவமும் அவருக்கு வழங்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.