புதையுண்டு மாண்ட அன்புக்குரியவருக்காக இறுதிவரை அங்கு காத்திருந்த ஜீவன்!

மண்சரிவில் புதையுண்டுள்ள தனது அன்புக்குரியவர்களை மீட்பதற்காக இந்த ஜீவன், மீட்புப் பணியாளர்கள் உடல்களை தோண்டியெடுக்கும் வரை அங்கேயே நின்றுள்ளது. வீட்டில் செல்லமாக இருந்த இந்த ஜீவன் மட்டும் மண்சரிவில் இருந்து உயிர் தப்பியுள்ளது.
மாவெனல்ல, தெவனகல மண்சரிவினால் புதையுண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருடன் வீட்டில் இருந்த ஜீவன் இது. மண்ணில் புதையுண்ட வீட்டாரை மீட்க வந்தவர்களுடன் தொடர்ச்சியாக அங்கே இருந்தது.
சம்பவ இடத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, இந்த ஜீவன் தொடர்ச்சியாக தோண்டிய இடத்தில் தான் மாண்டவர்களின் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
நன்றியுள்ள ஜீவன்! 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.