மோடி வேறு வழியே இல்லாமல் இலவச தடுப்பூசிக்கு ஒப்புக்கொண்ட கதை !

 


காங்கிரஸ் ஆட்சியில் எப்பொழுதும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாகவே போடப்பட்டு வந்தது.

பெரும்பாலும் மத்திய அரசின் நிறுவனங்களே தடுப்பூசியைத் தயாரித்து வழங்கும். அதற்குரிய உள்கட்டமைப்பு ,நிபுணத்துவம் இந்தியாவில் உண்டு.காங்கிரஸ் ஆட்சியில் மிகுந்த தொலைநோக்கோடு இவை உருவாக்கப்பட்டன. மோடி அரசால் முடக்கப்பட்டிருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் இதில் முக்கியமானது.
ஆனால் மோடி அரசு ,பல்லாண்டுகள் அனுபவம் வாய்ந்த,வெளிநாடுகளுக்கு பல தடுப்பூசிகளை இறக்குமதி செய்த மத்திய அரசு நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்காமல், இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டும் கொள்ளைலாபம் அடிக்க அனுமதித்திருக்கிறது. மாநில அரசுகள் அநியாய விலைக்கு இந்த இரண்டு நிறுவனங்களிடமும் வாங்கியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் தடுப்பூசிக்கென்று ரூபாய் 35,000கோடி ஒதுக்கப்பட்டது. அதில் வெறும் 4500 கோடி ரூபாய் தான் இதுவரை இந்த இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் எங்கே? ஏன் இலவச தடுப்பூசி போட மத்திய அரசு மறுக்கிறது? அனைவருக்கும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது போல இலவச தடுப்பூசி போடவேண்டும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து போராடி வந்தார்.
இதைத்தொடர்ந்து
கடந்தவாரம் உச்சநீதிமன்றம் மோடி அரசு மீது தடுப்பூசி விசயத்தில் கடுமையான விமர்சனைங்களை முன்வைத்தது. அத்துடன் நில்லாமல் மத்திய நிதிநிலை அறிக்கையில் தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 35,000 கோடிக்கு கணக்குக் கேட்டது. இதை இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் மோடி அரசுக்கு. காட்டினால் உச்சநீதிமன்றத்தில் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து சுட்டிக்காட்டிய தடுப்பூசி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துவிடும். ராகுல்காந்தியின் தொடர்ச்சியான இலவச தடுப்பூசி பிரச்சாரம்வேறு இந்தியா முழுவதும் மக்களிடையே மோடி அரசின் மீதான வெறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
ஆகவே இப்பொழுது வேறு வழியே இல்லாமல் மோடி இலவச தடிப்பூசிக்கு ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார்
தடுப்பூசியில் ஊழல் செய்யாமல் மோடி அரசு இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால் ஆயிரக்கணக்கான விலைமதிக்க முடியாத உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.இனியாவது விரைந்து செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.