அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஆயத்தம்!!

 


கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருகின்றது.

இதுதொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், ‘அலெக்ஸி நவால்னி வழக்கில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளின் மற்றொரு தொகுப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம்.

நாங்கள் சரியான இலக்குகளை பெற தொகுப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதார தடை அறிவிப்பு வெளியாகும்.

அதைசெய்யும்போது இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’ என கூறினார்.

இருபெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்கா- ரஷ்யா தலைவர்கள் அண்மையில் ஜெனீவாவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யாவின் சைபர் தாக்குதல்கள் மற்றும் பிற விரோத செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தது.

அத்துடன் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா ஏழு ரஷ்ய அதிகாரிகள் மற்றும் ஒரு டஸன் அரசாங்க நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.