சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக அரியாலை உதயபுரம் மக்கள் முறைப்பாடு!!

 


அரியாலை உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரைத் தடை செய்யுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் அப்பகுதி மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரியாலை உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பாதுகாப்பு காவலரண்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், படைத் தரப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.