மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது சீனாவின் விண்கலம். 

 


முதல்முறையாக மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது சீனாவின் விண்கலம்.

 சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி பணியின் திட்டத்தில் முதல் முறையாக மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு சீனா அனுப்பியுள்ளது. 

 விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் இலங்கை நேரப்படி இன்று காலை 6.52 மணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். லோங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் பயணித்தனர்.


 அமெரிக்கா நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. இதன் மையப்பகுதியான ‘தியான்ஹெ’ நிலையத்துக்கான பாகங்கள் ஏப்ரல் 29இல் ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று விண்வெளி நிலைய அமைப்பக்கென 3 விண்வெளி வீரர்களை சீனாவின் விண்வெளி ஏஜென்சி அனுப்பியுள்ளது. ரொக்கெட் புறப்பட்ட 10 நிமிடங்களில் புவி வட்டப்பாதையை அடைந்ததும், வீரர்கள் இருந்த விண்கலம் தனியாக பிரிந்து விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. 


இதனையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த திட்டம் வெற்றியடைந்ததாக அறிவித்தனர். விரைவில் அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். இந்த வீரர்கள் மூன்று மாதங்கள் தியான்ஹெ பெட்டகத்தில் தங்கி, விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட உள்ளனர். ஸ்பேஸ் சூட் எனப்படும் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, பெட்டகத்தை விட்டு வெளியேறி, பல மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தபடி, கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள். இந்த அபாயகரமான பணிகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 டொன் எடையில் விண்வெளி நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த விண்வெளி நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும் 340 முதல் 450 கி.மீ உயரத்தில் அது பூமியை சுற்றி வரும். சீனா கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.