கடலில் பேருந்துகளை மட்டுமல்ல ரயிலையும் இறக்குவேன்- டக்ளஸ்

 


கடலில் பேருந்துகளை மட்டுமல்ல ரயிலையும் இறக்குவேன்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடலில் காவியம்படைப்போம் என்று ஓவியம் தீட்டி- உசுப்பேற்றி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான் பேருந்துகளை கடலில் போட்டு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஊளையிடுகின்றனர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கூறினார். ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 


 கடல்வாழ்உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவாக கடல்நீரடி பாறைக்கு ஒத்தபொறிமுறையை செயற்கையாக உருவாக்கும் நோக்குடன் பாவனைக்கு உதவாத புகையிரதப் பெட்டிகள், பேருந்துகள், கப்பல்கள் மற்றும் கொங்கிறீட் துண்டங்கள் போன்றவற்றை கடலிலின் அடியில் போடப்படுகின்ற செயற்பாடு சுமார் 40 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 


 இது தேவையான ஆய்வுகள் மூலம் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்து குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 


ஆனால் சுயநலன்களுக்காகவும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்த செயற்றிட்டம் தொடர்பாக கடந்த காலங்களினைப் போன்று தமிழ்மக்கள் தவறாக வழிநடத்தி வருகின்றனர் என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.