மின்சாரசபையால் மக்கள் அலைக்கழிப்பு!!

 


வடமாகாண மின்சார சபையின் பொறுப்பற்ற செயல் மிகநீண்டகாலமாக விதிக்கபட்டிருந்த பயணத்தடை நேற்றைய தினம் நீக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள் பலரும் தம்மிடம் காணப்பட்ட மாதாந்த மின்பட்டியல் கொடுப்பனவு, மின்துண்டிப்பு படிவங்களை கொண்டு யாழ் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் உள்ள வடமாகாண மின்சார சபை கொடுப்பனவு அலுவலகத்திற்கு சென்றனர்.

இதன்போது அங்கு பட்டியல் கொடுப்பனவுகளை செலுத்த முடியாது, அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் செலுத்துமாறும் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்த மின்சாரசபை வாடிக்கையாளர் விசனத்துடன் சென்றனர். இந்நிலையில் மின்சார கொடுப்பனவு பீடத்திற்கு பொறுப்பான பொறியியலாளரை ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது பணமூலம் செலுத்தலாம் என கூறினார்.

இதனையடுத்து , ஊடாகவியலாளர் திரும்பிச்சென்ற பொதுமக்களிடம் நடந்தவற்றை செய்தியாக சேகரிக்க முற்பட்ட வேளை கொடுப்பனவை பணமூலமாக செலுத்தலாம் என பாதுகாப்பு உத்தியோகத்தரால் கதவுகள் திறக்கப்பட்டது.

அதன் பின்னர் பெருமளவான வாடிக்கையாளர் சமூக இடைவெளியுடன் காத்திருந்து கொடுப்பனவை செலுத்தி சென்றுள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.