ஊடக அமைச்சர் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விடுத்த உத்தரவு!!

 


செய்தி அறைகளில்துஸ்பிரயோக துன்புறுத்தலுக்குள்ளாகுவதான குற்றச்சாட்டுகள் குறித்து பல ஊடகவியலாளர்கள் தங்கள் அதிர்ச்சிகரமான அனுபவங்களை சமூக ஊடகத்தில் வெளிப்படையாக விவாதித்துள்ள நிலையில் அது தொடர்பில் உடனடியாக விசாரிக்க ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்று உத்தரவிட்டார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என்றும் இந்த விவகாரம் குறித்து அமைச்சு குற்றச்சாட்டுகளை ஆராயும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண் ஊடகவியலாளர்கள் சமீபத்தில் சமூக ஊடகமொன்றில் தாம் செய்தி அறையில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், ஆண் நண்பர்கள் சிலர் தவறான மொழியைப் பயன்படுத்துவதன் மூலமும், பொருத்தமற்ற தொடுதலினாலும் அவர்களை இவ்வாறு அதிர்ச்சிக்குள்ளாக்கியதை விவரித்தனர்.

இந்நிலையில் ஒரு ஆங்கில பத்திரிகையின் ஒரு ஆசிரியர் உடனடி நடவடிக்கை எடுத்துடன் அந்த ஆண் சக ஊழியரை பணிநீக்கம் செய்தார், பின்னர் அவர் பத்திரிகை துறையை விட்டு வெளியேறி மற்றொரு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.