தொழிலுக்கு சென்ற இரு மீனவர்கள் மாயம்!!

 


அம்பாறை – பொத்துவில், அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இயந்திரப் படகில் கடலுக்கு சென்ற இண்டு மீனவர்களே இவ்வாறு கடந்த 23ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர்.

காணமல் போனவர்கள் பொத்துவில் – களப்புக்கட்டு பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரும் பசறிச்சேனையை சேர்ந்த 32 வயதான ஒருவரும் என கூறப்படுகின்றது.

இந்தநிலையில் காணாமல் போயுள்ள மீனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.