14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் நீக்கவிருந்தது-ஜனாதிபதி!!

 


கடந்த 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் நீக்கவிருந்த நிலையில் அதற்கு முன்னதாக 11 ஆம் திகதி 101 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டமை காரணமாக பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டி ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு செயலணி கூடி கலந்துரையாடியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜூன் 11 ஆம் திகதி மரணித்ததாக கூறுவதாக இருந்தால், 10 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியில் இருந்து 11 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையே அந்தக் காலப்பகுதி அமையும். எனினும், அறிக்கையிடப்பட்டுள்ள முதலாவது மரணம் பெப்ரவரி 6 ஆம் திகதியே இடம்பெற்றுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

பெப்ரவரி 6 ஆம் திகதியே அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மரணச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. மற்றையவர் 67 வயதான ஒருவர். அவர் ஹோமாகமவை சேர்ந்தவர். அவர் ஏப்ரல் முதலாம் திகதி மரணித்துள்ளார். எனினும், அந்த மரணமும் ஜுன் 11 ஆம் திகதி என்றே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.

அவரும் அந்த 101 மரணங்களில் உள்ள ஒருவர். தொலைக்காட்சிகளுக்கு தகவல்களை வழங்கும் நிபுணர்களுக்கு இது தெரியாது. சரியான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அண்மையில் நான் கூறினேன். அவ்வாறு செய்த பின்னர் தற்போது இரண்டு பட்டியல்களிலும் மாற்றம் உள்ளது. அறிக்கையிடலில் மாற்றம் ஏற்ட்டுள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜூன் 11 ஆம் திகதி 101 பேர் மரணித்ததாக கூறப்பட்ட போதிலும் அன்றைய தினம் 15 பேரே மரணித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் அவ்வாறே அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.