150 கிலோ கஞ்சா நாகர்கோயில் பகுதியில் மீட்பு!!
வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் குடாரப்பு கடற்கரை பகுதியில் கஞ்சா பொதிகள் கிடந்தது கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா பொதியின் நிறை சுமார் 150 கிலோ கிறாமிற்கு மேற்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக் கஞ்சா பொதிகள் மூன்று பொதிகளாக காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை