பெரும்குற்றம் -கவிதை!!

 


கடற்கரை மணலில்

அரித்து அரித்து

கிடக்கின்றன நுரைப்பூக்கள்


எடுத்து எடுத்து உடைத்தபின்

மகிழ்வதானாலும் 

அழுவதானாலும் 

கவலையில்லை இக்கடலுக்கு


உடைப்பவர்களின் 

தடயங்களை அழித்துவிடும் 

அலைக்கு தெரிவதில்லை


இன்னமும் 

கரை இருக்கின்றது

கடல் இருக்கின்றது என்பது


கரையில் அமர்ந்திருக்கும் 

என்னிடம் கடல் பேசுவதெல்லாம் 

அலையை பற்றிய குறைகளாய்

தான் இருந்திருக்க வேண்டும் 


உடைக்கும் நுரைகளில் 

யாரும் இன்னமும் வானவில்லை கவனிக்கவில்லை என்பதுதான் பலகாலமாய் பெருங்குற்றமென்று

கூறிக்கொண்டிருந்தது

அக்கடல்


                                 ~மணிவண்ணன் மா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.