ரகசியத் திருமணம் செய்தாரா? குக்வித் கோமாளி புகழ்!!

 


குக்வித் கோமாளி புகழ் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் புகழ் அதனை மறுத்துள்ளார்.

பிரபல்யமான தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்தத நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு சீசனிலும் கோமாளியாகக் கலந்து கொண்டவர் தான் புகழ்.

இவர் இந் நிகழ்ச்சியில் பங்குபற்ற முதல் அது, இது, எது, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தலும் கூட, குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலமே மக்கள் மத்தியில் பிரபல்யமாகியுள்ளார்.

இதன் காரணமாக இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் புகழ் சில தினங்களுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக   தகவல் வெளியானது.

அத்துடன்  தான் காதலித்து வந்த பெண்ணை, சில வாரங்களுக்கு முன், தனக்கு நெருங்கிய வட்டாரங்களை மட்டுமே அழைத்து திருமணத்தை நடத்தியதாகவும் கூறப்பட்டிருந்தது.

எனினும் அப்படி ஒரு விடயமே நடக்கவில்லை என புகழ் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.