இந்தியா செல்லும் கப்பலில் எண்ணெய் கசிவு!!

 


கொழும்பு துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஹால்டியா துறைமுகத்திற்கு செல்லும் சரக்கு கப்பல் ஒன்றில் இருந்து பாரிய எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து போர்த்துக்கல் கொடியுடன் புறப்பட்ட “எம்.டி டெவோன்” கப்பலிலேயே எரிபொருள் கசிவு ஏற்பட்டது. குறித்த கப்பல் சென்னையில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் கடலில் பயணம் செய்யும் போது எரிபொருள் கசிவு குறித்து தகவல் கிடைத்ததாக இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக , சுமார் 10 கிலோமீட்டர் எரிபொருள் கடலில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கப்பல் தனது பயணத்தை தொடர்வதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நிலைமை கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கப்பல் இன்று மாலை அளவில் பயண முடிவிடத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பல் 10795 டொன்கள் நிறையுடைய 382 கொள்கலன்களை ஏற்றிச் செல்வதாகவும் கப்பலில் பல நாடுகளைச் சேர்ந்த 17 பேர் பயணிப்பதாக மேலும் தெரிவிக்கப்படுன்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.