முக்கிய நாடுகள் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை!!

 


ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான யோசனையின் முக்கிய நாடுகள் குழு, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்ட திருத்தத்தில் முன்னேற்றம் இன்மை குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

கனடா, ஜெர்மனி, வடக்கு மெசிடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடங்கிய இந்த முக்கிய குழு, இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் போதிய நீதி மேற்பார்வை இல்லாத மறுவாழ்வு செயல்முறை, தடுப்புச் சட்டத்தின் அண்மைக்கால நோக்கம் குறித்தே இந்த நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானம் 46/1இன் படி, போரின் தீங்கு விளைவித்த விடயங்களை நிவர்த்தி செய்யுமாறும், சிறுபான்மையினர் உட்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வழக்குகளை தொடரும் தனி ஆட்களுக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம், குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இது உடனடி, முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கான மனித உரிமைகள் பேரவையின் அழைப்புக்கு எதிரானது என்று முக்கிய குழு சுட்டிக்காட்டியுள்ளது.

குற்றப்புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மனித உரிமை சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும், கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாஃப் ஜசீம் ஆகியோர் தொடர்ந்தும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த சட்டம் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அரசியல் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தொடர்வது குறித்து கவலைப்படுவதாக முக்கிய குழு குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் காவலில் அண்மையில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை கோருவதில் இலங்கையின் சட்டத்தரணிகள் சம்மேளனத்துடன் தாம் இணைந்துக்கொள்ளவதாகவும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் . காணாமல்போனோர் அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள் குறித்தும் தாம் அக்கறை கொண்டிருப்பதாக குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைக்குமாறும் முக்கிய குழு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.