இலங்கை பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம்!

 


அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை உலக தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கமைய உயர்மட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக உயர் கல்விக்கான ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில்,வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கீழ்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் மணிபால் உயர் கல்விக் கல்லூரியின் மணிபால் உயிரியல் விஞ்ஞானக் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகளின் ஒன்றியத்தின் விவசாய நிலையம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத் தொழிநுட்ப ஒத்துழைப்புச் செயற்பாடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மலேசியாவின் மலயா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அவுஸ்திரேலியாவின் மூன்றாம் படிநிலைக் கல்வி தரப்பண்பு மற்றும் தரநியமங்கள் தொடர்பான பிரதிநிதித்துவ நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம், தரவுகளை சான்றுப்படுத்தலின் போதான ஒத்துழைப்புக்கள் மற்றும் நிறுவனங்களை வலையமைப்பாக்குதல் போன்றவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விவசாய விரிவாக்கல் கல்விப் பிரிவு மற்றும் கனடாவின் அல்பேர்டா பல்கலைக்கழகத்தின் விரிவாக்கல் பீடம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பனவற்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.