கொட்டகலையில் தொழிலாளர்கள் போராட்டம்📸!

 


" 20 கிலோவுக்கு மேல் கொழுந்து பறித்தால்தான் வேலை" - தோட்ட நிர்வாகம் திட்டவட்டம்! 

கொட்டகலையில் தொழிலாளர்கள் போராட்டம்.

 20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் மிரட்டுவதாக சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை, டிறேட்டன் தோட்டம், டீ.டி (D.T) பிரிவு தொழிலாளர்கள் இன்று (21.06.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சட்டப்பூர்வமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு 800 ரூபாவே வழங்கப்படுகின்றது என சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள், தோட்ட முகாமையாளரை உடன் இடமாற்றுமாறும் வலியுறுத்தினர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.