ரயில் சேவைகள் தொடர்பிலான அறிவிப்பு

 


பயணக்கட்டுப்பாட்டுத் தடை எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் ரயில் சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக ரயில்வே திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண தெரிவித்திருந்தார்.

ரயில் சேவையின் போது, கடந்த காலங்களில் மாகாணங்களுக்கிடையே பின்பற்றப்பட்ட முறையே இந்த தடவையும் பின்பற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 21ம் திகதி காலை பயணக்கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 முதல் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாடு அமுலாகும்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்தும் நிலவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.