பதற்றமான உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வடகொரியா!!

 


வடகொரிய பதற்றமான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதனை அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.

தலைநகர் பியோங்யாங்கில் இந்த வாரம் தொடங்கிய ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய குழுவில் உணவு நிலைமை குறித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாகி வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது தேசிய தொழில்துறை உற்பத்தி கால் பகுதி அதிகரித்துள்ளது’ என கூறினார்.

கடந்த ஆண்டு சூறாவளி காரணமாக விவசாயத் துறை அதன் தானிய இலக்குகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் 45 டொலர்கள் ஆகும்.

இந்த நிகழ்வின் போது அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான உறவுகள் குறித்து அதிகாரிகள் கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

இது இன்னொரு கடினமான ‘மார்ச்’ என அதிகாரிகளிடம் வடகொரியா தலைவர் கூறியதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

முக்கியமான உதவி இல்லாமல் 1990ஆம் ஆண்டுகளின் பஞ்ச காலத்தில் நாட்டின் போராட்டத்தைக் குறிக்க வட கொரியா அதிகாரிகள் பயன்படுத்திய சொல் மார்ச் ஆகும்.
அந்த நேரத்தில் பட்டினியால் இறந்த வட கொரியர்களின் மொத்த எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் மதிப்பீடுகள் மூன்று மில்லியன் வரை உள்ளன.

இதனிடையே கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த வடகொரியா தனது எல்லைகளை மூடியுள்ளது. இதன் விளைவாக சீனாவுடனான வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. உணவு, உரம் மற்றும் எரிபொருளுக்காக வட கொரியா சீனாவை நம்பியுள்ளது.

அணுசக்தி திட்டங்கள் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளின் கீழ் வட கொரியாவும் போராடுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.