முன்மாதிரி செயற்பாட்டில் நெல்லியடி வர்த்தக சங்கத்தினர்!!

 


கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களிற்கு இலவச தொலைபேசி இணைப்பு (sim card) வழங்குவதற்கு நெல்லியடி வர்த்தக சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நெல்லியடி வர்த்தக சங்கத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு 25 GB நேர்நிகர் (ZOOM) வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக  மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பாடசாலைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்படடுள்ளன. இவ்வேளையில் மாணவர்களுக்கான கல்வி செயற்பாடானது இணையவழி ஊடாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக் கற்றலை

வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்கள் பெற்றுக் கொள்ள  முடியாமல் இருக்கின்ற நிலைமையை சமூக ஆர்வலர்களால் நெல்லியடி வர்த்தக சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனால் நெல்லியடி வர்த்தக சங்கத்தால் இணையவழிக் கல்வி செயற்பாட்டில் பங்குபற்றுவதற்கு வசதியாக நெல்லியடி வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு முதற்கட்டமாக 1000 மாணவர்களுக்கு 25 GB நேர்நிகர் (ZOOM) வசதியுடனான இலவச தொலைபேசி இணைப்புகள் (SIM CARD) வழங்கப்படவுள்ளன. இதனைப் பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிரதேச கிராம அலுவலகருடன் தொடர்பு கொண்டு பெயர் விபரங்களை அறியத்தருமாறும் நெல்லியடி வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.