இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய பரபரப்பு!!

 


முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வராமல் வீரவன்சவிற்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாகியுள்ளதாகவும்  மூன்றாம் தரப்பொன்றின் முயற்சிகள் காரணமாக இருவருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல பௌத்தமதகுரு ஒருவர் இருவருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள்ளதாகவும் , அதன்படி 2024 ஜனாதிபதி தேர்தலில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் பொதுவேட்பாளராக விமல்வீரவன்சவை நியமிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்க சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல் வீரவன்ச தரப்பினர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்கவேண்டும் சரியான தருணம் வரும்போது மைத்திரிபால சிறிசேன போன்று அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விமல்வீரவன்ச பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளில் கண்வைத்துள்ளார் என்பது வெளிப்படையான உண்மை.

எனினும்  அதற்கான வேறு தந்திரோபாயங்களை வழிமுறைகளை பின்பற்றுவது என குறிப்பிட்ட பௌத்தமதகுரு உட்பட இந்த திட்டத்தை முன்னெடுப்பவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விமல்வீரவன்ச கட்சியில் தற்போது காணப்படும் நிலையிலிருந்து மேலும் வளருவதற்கு அனுமதிக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்பது அடிப்படையாக வைத்தே அவர்கள் வேறு வழிமுறைகள் குறித்து சிந்தித்துள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்றத்திற்கு செல்வதில்லை என உறுதியான தீர்மானத்துடன் காணப்பட்ட முன்னாள் பிரதமர் அந்த முடிவை மாற்றியுள்ளமை தற்செயலான விடயமில்லை என்றும் எதிர்காலத்தில் எதிர்பார்க்காத பல அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.