செவிப்புலனற்றோர் வளாகத்தில் விசேட தேவையுடைய ஆணின் சடலம்!!
மட்டக்களப்பு- இருதயபுரம் ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள பகுதியிலுள்ள செவிப்புலனற்றோர் அலுவலகம் ஒன்றிலிருந்து, விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த செபஸ்டியான் ஜெயந்தன் குரூஸ் (49 வயது) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மட்டு.மாவட்ட செயலகத்தில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் இவர், செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை