சொக்லேற் கனவுகள் 38 - கோபிகை!!

 


'அனுதி....

நீங்கள் குருதிதானம்

செய்யவேண்டாம்...

நான் ஆதியிடம்

கதைக்கிறேன்....'

இப்படிச் சொன்ன 

வைத்தியரை

ஆழுமாய்ப் பார்த்தாள்

அனுதி. 


'சின்ன குழந்தை

இல்லை நான்.

நானும் வைத்தியர்தான்..

உங்களுக்கே தெரியும்....'


'எதுவானாலும் 

என்னட்டயே சொல்லுங்கோ..

ஆதியிட்ட வேண்டாம்'

என்றாள். 


ம்ம்....இதுக்கு மேல

சொல்லாமல் விடமுடியாது....

என்றபடி அவளைப் பார்த்த

வைத்தியர் குருபரன்,


'அனுதி...உங்களுக்கு 

குருதிப்புற்று நோய்....

இருக்கிற வாய்ப்பு 

அதிகமாக.....'


முகப்பூ வதங்கியது....

மென்று விழுங்கியவனை

நன்றாகப் பார்த்தவள்,

கண்களில் அவசரமாய்

கோர்த்த நீரை கட்டினாள்

இமை தட்டி....


'ஐயோ...ஆதி......

ஆதியால எப்பிடி....'

தாங்கமாட்டானே

இதயம் பலமாய் 

அடித்துக் கொண்டது. 


அனுதி என்ற பெயருடைய 

பெண்ணின் இறப்பையே 

தாங்கமுடியாதவன்,

அவளது மணத்தை.....


தடம்புரண்ட சிந்தனையை 

அடக்கினாள்,

மனதை திடப்படுத்தினாள்,

மூச்சை இழுத்துவிட்டு

ஆசுவாசப்படுத்தினாள். 


இந்தச் செய்தி 

வீட்டிற்கு தெரியவேகூடாது

அவர்களால் நிச்சயமாக 

தாங்கவே முடியாது....

எண்ணங்கள் ஓட


யாசிப்பது போல

ஆரூரனைப் பார்த்தாள். 

'என்ன' என்ற கேள்வியோடு

பார்த்த்த  ஆரூரனிடம், 


'இந்த விசயம்....,

எனக்கு வருத்தம் எண்டு 

வீட்டில தெரியவேண்டாம்'

என்றாள் கெஞ்சுதலாக...


'அதெப்பிடி அனு,

ஆதி என்ர நண்பன்..

அவனிட்ட சொல்லாமல்

எப்பிடி விடுறது?'


'நான் ..நானே சொல்லுறன்...

அதுவரைக்கும்

நீங்கள் சொல்லவேண்டாம்...

ஆதி நல்லபடி

படிப்பை முடிக்கட்டும்,

வந்த பிறகு நானே ...'

அவள் இழுக்க,


கரம் கூப்பியிருந்த 

அனுதியைப் பார்த்தவனுக்கு

வியப்பும் வேதனையும்....

மனதில் சங்கடம்..


'ம்ம்....ஆனா இது

ஆரம்ப கட்டம்தான்...

ஆதியிட்ட சொன்னா 

நிச்சயம் ஏதாவது...'


'ம்ம்....குணப்படுத்தினாலும்

வேற பாதிப்பு இருக்குமே...'

கேட்க நினைத்ததை

கேட்காது இழுத்தாள்....


'ம்ம்....உங்களுக்கே தெரியும்

சிலவேளை குழந்தைகள்'

அவன் சொல்ல 

தலையை ஆட்டினாள் அனுதி. Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.