இலங்கை பாராளுமன்ற கட்டட முன்றலில் உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பற்றி நீங்கள் அறிவீர்களா?


பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இங்கு தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என்பதுடன், அமர்வு முடிவடையும் வரை அது பறக்கவிடப்பட வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயமாகும்.

பகல் வேளையில் தேசியக் கொடி பறக்கவிடப்படுவதுடன் இரவாகும் பொழுது தேசியக்கொடிக்கு வழங்கப்படும் கௌரவமாக அதனை இறக்குதல் வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற அமர்வு நடைபெறுகின்றது என்ற அடையாளத்தைக் குறிக்கும் வகையில் இந்த விளக்கு ஒளிரவிடப்படுகின்றது.
பொதுவாக வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதி போன்ற விஷேட தினங்களில் இரவு வேளை வரை அமர்வு தொடரும் பொழுது நீங்கள் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் பயணித்தால் இந்த கம்பத்திலுள்ள விளக்கு ஒளிரவிடப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.