முல்லைத்தீவில் சட்ட விரோத மணல் அகழ்வு!!

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள உப்புமாவெளி பிரதேசத்தில் யாழ். ஆயர் இல்ல காணியில் சட்டவிரோதமாக பாரிய அளவிலான மணல் அகழ்வு இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.\ இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆராய தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு நேற்று மாலை சென்று பார்வையிட்டார்.


இதன்போது அங்கு சட்டவிரோதமாக குவிக்கப்பட்டிருந்த மணல் குவியலை பார்வையிட்ட அவர் கருத்து தெரிவிக்கையில், உப்புமாவெளி பிரதேசத்தில் 5 ஆயிரம் டிப்பர்களில் ஏற்றக்கூடிய மண் குவியல் குவிக்கப்பட்டுள்ளது. இது ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணி என்று சொல்லமுடியும் தற்போது ஆயர் இல்ல காணியில் இரண்டு வகையான மணல் அகழ்வுகள் நடைபெறுகின்றன ஒன்று அனுமதிபெற்று மற்றது அனுமதி அற்றமுறையில் நடக்கின்றன.


இது குறித்து ஆயர் இல்லத்தினர் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் சட்டவிரோமான இந்த நடவடிக்கை குறித்து மாவட்டத்தில் இருக்கக்கூடிய இராணுவத்தினர், பொலிஸார், தகுதி வாய்ந்த அதிகாரிகள் பலர் இருந்தும் இதனைத் தடை செய்யமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? அவர்களும் இவர்களுடன் சேர்ந்து கையூட்டல் பெற்று அனுமதி வழங்கியுள்ளார்களா? என கேள்வி எழுப்பினார். எனவே இது குறித்து அனைத்து தரப்பினரும் பதில் கொடுக்கவேண்டும்.


குறிப்பாக யாழ். ஆயர் இல்லம் இதற்கு பதிலளிக்கவேண்டும். இது யாருடைய காணி? எதற்காக இந்த மண் குவிக்கப்பட்டுள்ளது?யாழ். ஆயர் இல்லம்தான் இந்த மண்ணினை விக்கின்றார்களா? சட்டவிரோத மணல் குவிக்கப்பட்டுள்ள குறித்த காணியில் இன்னொரு பகுதியில் சட்டப்பூர்வ மண்ணகழ்வு ஒன்றும் இடம்பெறுகிறது.


ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்தும் இதுவரை அது நிறுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், தற்போதும் ஆயர் இல்லத்திற்கு பத்து இலட்சம் பணம் சென்றுள்ளதாக அறிகின்றேன் என்றும் கூறினார். நாட்டில் மக்கள் பயணத்தடையினால் முடக்கப்பட்ட நிலையில் இந்த மணல் குவிப்பு இடம்பெற்றுள்ளது.


இதற்கு முற்று முழுதான பொறுப்பு ஆயர் இல்லம்தான் சொல்லவேண்டும். சட்டரீதியான மணல் அகழ்வும் இடம்பெறுகின்றது, சட்டத்திற்கு புறம்பான மணல் அகழ்வும் இடம்பெறுகின்றது. விரைவில் இது நிறுத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் ஏன் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை? எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.