பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான தகவல்!!

 


நாட்டில் 4 கட்டங்களாக வருகின்ற 29ஆம் திகதிமுதல் பாடசாலைகள் திறக்கப்படப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன.


இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா அந்தத் தகவல்களை நிராகரித்துள்ளார். அத்துடன் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது பற்றிய திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.


எவ்வாறாயினும் 7ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படப் போவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவர முன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்நிலையில் அவற்றை அரசாங்கம் முற்றாக நிராகரித்த போதிலும் இறுதியில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, 14ஆம் திகதிவரை பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.