நான்கு பெரிய வல்லரசு நாடுகளுடன் போரிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள். - வைத்தியர் கந்தராஜ்! 


உலகின் நான்கு பெரிய வல்லரசு நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை எதிர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த வைத்தியர் கந்தராஜ் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், விடுதலைப் புலிகளின் போராட்டம் சாதாரணமான ஒன்றல்ல, அது உலக போருக்கு நிகரான ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேரடித்தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டிருந்தால் விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் அழித்திருக்க முடியாது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தொழில்நுட்பம் மிகவும் வலிமையானது. 

அவ்வாறான அமைப்பை அழிப்பதென்பது சாதாரணமான ஒன்றாக இருந்திருக்காது. காட்டிக்கொடுக்கப்பட்மையே விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணமாகும். 

 விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழ் ஈழத்தினை தனி நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டார். இதன் ஆபத்தை புரிந்துகொண்ட சீனாவும் - அமெரிக்காவும் புலிகள் அமைப்பை அழிக்க ஒத்துழைப்பு வழங்கியது. 

 எனினும், இந்த நாடுகளுடன் இணங்கி செயற்பட்டிருந்தால், இன்று உலக போக்கை தீர்மானிக்கின்ற தலைவர்களில் ஒருவராக பிரபாகரன் இருந்திருப்பார்” என அவர் மேலும் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.