லண்டனில் நள்ளிரவில் இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்?

 


லண்டனில் 22 வயது மதிக்கத்தக்க இஸ்லாமிய இளம் பெண்ணின் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறி வீடியோ வைரலாகி வரும் நிலையில், அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில், வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது. அந்த வீடியோவில் இரயிலில் பெண் ஒருவர் இனவெறியை தூண்டும் வகையில், கருப்பின மனிதருடன் சண்டை போடுவது போன்று இருந்தது.

இதையடுத்து இது குறித்து வெளியான செய்தியில், கடந்த 16-ஆம் திகதி லண்டனின் West Ham-க்கு அருகில் Basildon-ல் இரயில் சென்று கொண்டிருந்த போது, உள்ளூர நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.


அதில், Hassina Ahmed என்ற 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண், இரயிலில் இருந்த அல்ஜீரியரை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டுகிறார். இந்த வீடியோ வைரலானதால், இது குறித்து அப்பெண், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள விளக்கத்தில், அந்த நபர் தூண்டப்பட்டதன் காரணமாகவே நான் அப்படி பேசியதாகவும், இது ஒரு இனவெறி தாக்குதல் இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அப்பெண் தொடர்ந்து கூறுகையில், அந்த அல்ஜீரிய நபர், இரயிலில் பாலியல் ரீதியாக தன்னை நெருங்கி போன் நம்பரைக் கேட்டார். இதனால் நான் மிகுந்த அச்சத்தில் இருந்தேன்.

அப்போது அவர் தான் ஒரு இஸ்லாமியர் என்பதை அறிந்த பின், தன்னுடைய ஆடைகள் அணிருந்திருப்பதைக் கூறி அவமானப்படுத்தினார். நீங்கள் எப்படிப்பட்ட இஸ்லாமிய பெண்? உங்கள் உடலைக் காட்டுகிறீர்கள். நீங்கள் ஒரு என்று மோசமான வார்த்தைகளில் கூறினார்.


 அது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் தன்னைக் தற்காத்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அப்படி நடந்து கொண்டேன். நான் ஒரு இஸ்லாமியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

எந்த ஒரு மதத்திலும், மூடிமறைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. நான் எப்படி ஆடை அணிவது என்பது எனக்கு தெரியும். இதை நான் நிலையாக கையாண்டிருக்கலாம், ஆனால் அன்று நான் அளவுக்கு அதிகமான போதையில் இருந்துவிட்டேன்.

இதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஆனால், அந்த அல்ஜீரியன் தான் என்னை மிகவும் கோபத்தை உண்டாக்கினார். என்னை தற்காத்து கொள்ளவே இப்படி செய்தேன். இது எப்படி இனவெறியாக இருக்க முடியும்? நான் கருப்பின மக்களுக்கு எதிரானவள் கிடையாது.


நான் கிழக்கு லண்டனில் வசிக்கிறேன், என்னுடைய தாயார் கொலாம்பியாவைச் சேர்ந்தவர், தன்னுடைய தந்தை கென்யாவைச் சேர்ந்த இஸ்லாமியர். இந்த வீடியோ வைரலான பின்பு தனக்கு பல கொலை மிரட்டல் வருவதாக கூறும் அவர் இது குறித்து காவல்நிலையத்திற்கு தானாக சென்று ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளார்.


எனக்கு இப்போது வீட்டை விட்டு வெளியில் வர கூட பயம் இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கடந்த 21-ஆம் திகதி அவர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார், பொலிசார் இது குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதியளித்து அவரை அனுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.