பாடசாலைகளைத் திறக்குமாறு ஐ.நா. வலியுறுத்து!!

 


கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இயன்றவரை விரைவாக திறக்க வேண்டும் என ஐ.நா. இன்று வலியுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக உலகில் சுமார் 600 மில்லியன் (60 கோடி) மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. ‘இதை தொடர அனுமதிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப் – UNICEF) பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் (James Elder) , ஜெனீவாவில் இன்று (27) செய்தியளார்களிடம் பேசுகையில் கூறியுள்ளார்.

கொவிட்19 பரவலைக் கட்டுப்படுத்துவத்றகாக அரசாங்கங்களுக்கு உள்ள கடினமான தெரிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், பாடசாலைகள் இறுதியாக மூடப்பட வேண்டும் எனவும் அவையே முதலில் திறக்கப்பட வேண்டும் எனவும் ஜேம்ஸ் எல்டன் கூறினார்.

அத்துடன் ‘பாடசாலைக்கு முன்னர் மதுபான நிலையங்கள், விடுதிகளை திறப்பது பாரிய தவறு ஆகும் எனவும் அவர் கூறினார். அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்வரை பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு காத்திருக்க முடியாது என அவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள கடினநிலைக்கு மத்தியிலும் கல்விக்கான நிதியொதுக்கீடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, கிழக்கு மற்றும் தெற்கு ஆபிரிக்க பிராந்தியங்களில் தற்போது சுமார் 40 சதவீதமான சிறார்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.