ராஜா ராணி 2 இன் நேற்றைய காட்சிப் பதிவு!!

 


ராஜா ராணி 2 சீரியல் தினமும் விறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் அடைந்துவருகிறது, அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.  வீட்டில் சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு நடக்கிறது. சந்தியாவுக்கு அவளுடைய அண்ணன் அமெரிக்காவில் இருந்து அனுப்பிய பார்சலை வாங்கிவருவதற்கு சரவணனுடன் கொரியர் ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரில் செல்கிறாள்.

சந்தியாவின் தோழி அவளுக்கே தெரியாமல் அவளுடைய பையில் வைத்த விவாகரத்து பத்திரம் பற்றி போனில் பேசிக்கொண்டிருக்கும்போது அறைகுறையாகக் கேட்ட சரவணன், தன்னை சந்தியா விவாகரத்து செய்யப் போவதாக நினைத்துக்கொண்டு புழுங்கிக்கொண்டிருக்கிறான். அதிலிருந்து சரவணன், சந்தியாவிடம் சரியாககூட பேசாமல் இருகிறான். இந்த சூழலில்தான் இருவரும் கொரியர் ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரில் போகிறார்கள்.

இருவரும் ஸ்கூட்டரில் போகும்போது சரவணன் பெண்கள் ஏன் எப்போதும் அனைத்தையும் மனத்திற்குள்ளேயே மறைத்து வைத்து கொள்கிறார்கள் என அவரது விவாகரத்து பிளான் பற்றி குறிப்பாக கேட்கிறான்.

அதற்கு சந்தியா, ஆண்கள் என்ன பேசினாலும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், ஒரு பெண் பேசினால் இந்த சமுதாயத்தில் இருப்பவர்கள் அதற்கு பல அர்த்தங்கள் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் இதை பேசனும் பேசக்கூடாதுனு ஒரு லிஸ்ட்டே உருவாயிடும். அதனால்தான் பல நேரங்களில் பெண்கள் நடக்கிறதை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு அமைதியாவே இருந்துடுவாங்க” என்று கூறுகிறாள்.

இதைக் கேட்ட சரவணன், மொத்தத்தில பெண்கள் எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிறதுக்கு பெண்கள் இல்லை காரணம். ஆண்கள்தான் அதுதானே உங்க தீர்ப்பு என்று கேட்கிறான். இதைக்கேட்ட சந்தியா, இல்லை என்று சொல்ல முடியாமல் அப்படியும் புரிஞ்சுக்கலாம் என்று கூறுகிறாள். ஆனால், ஒரு குடும்பம்னு வந்துட்டா இந்த மாதிரி விவாதம் பண்ணிகிட்டிருந்தா யாராலயும் மாசக் கணக்கில்கூட சேர்ந்து வாழ முடியாது. அங்க பொண்ணா இருந்தாலும் ஆணா இருந்தாலும் விட்டுக்கொடுத்துதான் ஆகனும். வேற வழியில்லை. அது நடக்கும் என்று சந்தியா கூறுகிறாள்.

அதற்கு சரவணன், “நீங்க படிச்சவங்கதானே வேற வழி இல்லாமல் சேர்ந்து வாழ்ந்தா அது தப்பு இல்லையா? சகிச்சுகிட்டு வாழற மாதிரி தான அப்படிதானே அர்த்தம்” என்று கேட்கிறான். அதற்கு சந்தியா, “அனுசரிச்சு போறதை சகிச்சுகிட்டு போறதா சொன்னா அப்புறம் நம்ப ஊர்ல நூத்துக்கு தொண்ணூறு குடும்ப இப்படிதான் வாழறாங்கனு அர்த்தம். எல்லாத்தையும் ரொம்ப நுணுக்கி நுணுக்கி பார்க்காமல் டேக் இட் ஈஸியா எடுத்துக்கிட்டாதான் வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தா ஓடும். அப்புறம் கல்யாண வாழ்க்கையில கணவன் மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து வாழனும் எல்லாத்தையும் விட இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த விட்டுக்கொடுத்தல் ரெண்டு பக்கமும் நடக்கனும்” என்று கூறுகிறாள்.

இதற்கு சரவணன், “ஏங்க நான் என்ன கேக்கிறேன்? கல்யாணம் பண்றது எதுக்கு நல்லபடியா சேர்ந்து சந்தோஷமா வாழறதுக்குதானே, எதுக்குங்க நடுவுல விட்டுட்டு ஓடனும். அப்புறம் எதுக்குங்க கல்யாணம் பண்ணனும்” என்று கேட்கிறான். இதைக்கேட்டு புரியாத சந்தியா, “என்னங்க கொழப்பறீங்க, நான் விட்டுக்கொடுக்கிறதைப் பத்தி பேசுறேன். நீங்க விட்டுட்டு ஓடறதுனு சொல்றீங்க…” என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், “என்னவோ ஒன்னுங்க, நான் சொல்றதை நீங்க நல்லா யோசிச்சு பாருங்க… புரியும்” என்று கூறுகிறான். அதற்கு சந்தியா எனக்கு எதுவுமே புரியலிங்க, ஆனால், கணவன் மனைவி ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்க கூடாத ஒரு விஷயம் இருக்கு. அதுதான் அவங்களோட கனவு. வாழ்க்கையில இதை அடையனும்னு எல்லோருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியக் கனவை ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்க கூடாது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை நோக்கி போய்க்கிட்டே இருக்கனும்.” என்கிறாள்.

இதைக் கேட்ட சரவணன் தனது மனதுக்குள், “தாராளமாக போங்க சந்தியா, நீங்க வாய் திறந்து ஒரு வார்த்தை கேட்டாள் அடுத்த நிமிஷமே நான் கையெழுத்து போட்டுத் தர்றேன்” என்று சொல்லிக்கொள்கிறான். அப்போது, சரவணன் அமைதியாக இருப்பதைப் பார்த்து என்ன அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், கனவை நோக்கி ஓடனும்னு சொன்னிங்க இல்ல, ஓடலாம், ஆனால், நிஜத்துல வாழ்ந்த வாழ்க்கையை மறந்துடக் கூடாது. ஏன்னா, மரம் வானத்தை நோக்கி வளர்ந்தாலும் வேர் மண்ணுக்குள்ளதான் இருக்கு என்று கூறுகிறான். இதைக் கேட்டு சந்தியா நாம் என்ன சொன்னாலும் இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று யோசிக்கிறாள்.


அடுத்த காட்சியில், ஸ்வீட் கடையில், கடை பையன் சர்க்கரை சரவணனிடம் உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து வந்த லெட்டரை அண்ணி கொடுக்க மறந்துட்டாங்க போல என்று சொல்லிவிட்டு அந்த கவரை கொடுக்கிறான். அதை வாங்கி சரவணன் அப்படியே வைத்துவிடுகிறான். அது வருஷம் வருஷம் வருவதுதானே அதை பார்த்துவிட்டு என்ன செய்வது, இதற்கு பதில் கவர் அனுப்பனும் என்று கூறுகிறான்.

அப்போது, சந்தியா கொரியரில் வந்த பாக்ஸ் உடன் கடைக்கு வருகிறாள். தான் அந்த கவரை உங்களிடம் கொடுக்க மறந்துவிட்டேன் என்று சொல்கிறாள். பிறகு, அவளுடைய அண்ணன், அனுப்பிய பார்சலைக் காட்டுகிறாள். சர்க்கரை பாக்ஸில் என்ன இருக்கிறது என்று கேட்கிறான். அதற்கு சந்தியா, ஒரு பாக்ஸில் துணி மணி, இன்னொரு பாக்ஸில் ஸ்வீட் இருப்பதாகக் கூறுகிறாள். அதற்கு சர்க்கரை எல்லோரும் நம்ம கடை ஸ்வீட் தானே வாங்கிப் போறாங்க ஆனால், நீங்க வெளியில இருந்து ஸ்வீட் வாங்கி வந்திருக்கீங்க என்று கேட்கிறான்.

அதற்கு சந்தியா, இந்த துணி எங்க அண்ணன் அமெரிக்காவில் இருந்து அனுப்பியது. இந்த ஸ்வீட் பாளையங்கோட்டையில் இருந்து எங்க சித்தப்பா அனுப்பியது. பார்சல்ல வரும்போது, இந்த லட்டு எல்லாம் உடைஞ்சிருக்கு நீங்க சரி பண்ணி தர முடியுமா என்று கேட்கிறாள். இதற்கு சர்க்கரை இந்த வேலை எல்லாம் அண்ணனுக்கு ஜுஜுபி என்று கூறுகிறான். கோபமாக இருக்கும் சரவணன், உங்க அண்ணனுக்கு எல்லாத்துலயும் அவசரம், கொஞ்சம்கூட பொறுமை நிதானம் எதுவுமே இல்லை. அமெரிக்கா போற அவசரத்துல உங்க படிப்புக்கும் தகுதிக்கும் திறமைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத எனக்குபோய் கட்டி வச்சுட்டாங்க, சரி போங்க சரி பண்ணி எடுத்து வர்றேன் என்று சொல்கிறான். இதைக் கேட்டு சந்தியா வருத்தப்படுகிறாள். ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கேட்கிறாள். அதற்குள் கடைக்கு கஸ்டமர் வந்துவிடுகிறார்கள். சந்தியாவும் பாக்ஸை எடுத்துக்கொண்டு போய்விடுகிறாள்.

சந்தியா போன பிறகு, சர்க்கரை நீங்க ஏன் அப்படி பேசினிங்க என்று கேட்கிறான். நான் என்னடா பேசினேன், கஸ்டமர் வந்தாங்க ஸ்வீட் கொடுத்தேன் காசு வாங்கிபோட்டேன் என்று பதில் கூறுகிறான். அதற்கு சர்க்கரை நான் அதை சொல்லவில்லை, சந்தியா அண்ணிகிட்ட ஏன் அப்படி பேசினீங்க… இப்பல்லாம் உங்களுக்கு அடிக்கடி கோபம் வருதுன்னே… சந்தியா அண்ணி கண்கலங்கிட்டே போனாங்க என்று கூறுகிறான். சரவணனும் வருத்தப்படுகிறான். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.