டொலரையும் விழுங்கிவிட்டது அரசாங்கம் - ரணில் சாடல்!!

 


ஐக்கிய அமெரிக்க டொலர், பிரச்சினையிலிருந்து  அரசாங்கத்தால் தலையை தூக்கிக்கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் டொலரை விழுங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவி கிடைப்பது உறுதிப் படுத்தப்பட்டதன் பின் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்தும் நிதி உதவியைப் பெற முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மேலும் வலியுறுத்தி உள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: அண்மைக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் முகங் கொடுத்திருக்கும் நெருக்கடிகள் வெளி நாட்டு நாணய இருப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளன. எமது வெளி நாட்டு இருப்பான 4 பில்லியன் டொலர்களில் பிணையங் களுக்கான கொடுப்பனவு செலுத்தப் பட்டதன் பின்னர் ஒரு பில்லியன் டொலர் குறைவடையும்.

எனவே தற்போது எம்மிடம் இருக்கும் வெளி நாட்டு இருப்பின் பெறுமதி 3 பில்லியன் டொலர்களாகும். அதே போன்று எரிபொருள் கூட்டுத் தாபனம் 130 கோடி டொலர்களைச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது. இன்றளவில் எமது நாட்டின் வணிக வங்கிகளில் டொலர்களுக்குப் பற்றாக் குறை ஏற்பட்டிருக் கின்றது. வங்கிகள் கடனாளிகளாக மாறி யிருக்கின்றன.

இது வரையில் அது குறித்த தரவுகள் வெளியிடப் படாத போதிலும், தற்போது கிடைத் திருக்கும் தகவல்களின் படி அக் கடன்களின் பெறுமதி 300 கோடி அமெரிக்க டொலர்களாகும். ஆகவே இப்போது எமது நாடு மீளச் செலுத்த வேண்டியிருக்கும் கடனின் பெறுமதி 430 கோடி அமெரிக்க டொலர் களாகும். இருப்பினும் எம்மிடம் தற்போது இருக்கும் 300 கோடி டொலர்களில் இவ்வருடம் முடிவடைவதற்குள் 10 கோடி டொலர்களைப் பிணையங் களுக்கான கொடுப்பனவாகச் செலுத்த வேண்டியுள்ளது.

எமது நாட்டுக்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் போதியளவு நிதி இல்லாததன் காரணமாக, இறக்குமதிகள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. உரத்தை இறக்குமதி செய்வதற்குப் பணமில்லை. அதனாலேயே உர இறக்குமதியைக் கட்டுப்படுத்தி, சேதன உரத்தை உற்பத்தி செய்யப் போவதாக அரசாங்கம் கூறுகின்றது.

அதே போன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு அவசியமான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான பணம் இல்லாததன் காரணமாகவே 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசி வழங்கப்படும் செயற் திட்டம் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.

இவ்வாறான தொரு சூழ்நிலையில் அண்மையில் சர்வதேச நாணய நிதியமானது அதில் அங்கம் வகிக்கும் 198 உறுப்பு நாடுகளுக்கு அவசியமான நிதியுதவியை வழங்குவதற்குத் தீர்மானித் துள்ளது. அதனூடாக எமது நாட்டுக்கு 80 கோடி டொலர் நிதி கிடைக்கப் பெறும். எனினும் தற்போது நாடு முகங் கொடுத்திருக்கும் நிதி நெருக்கடியை ஈடு செய்வதற்கு அதுவும் போதுமானதல்ல.

ஆகவே இயலுமானவரை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்தி, எதிர்வரும் 2 அல்லது 3 வருட காலத்துக்கு அவசியமான நிதியைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகின்றேன். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ததன் பின்னர் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்தும் நிதி யுதவிகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

அவ்வாறு இல்லா விட்டால் எதிர் வரும் வருடத்தில் தொழில் அற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் வாழ் வாதாரத்தை உழைப்பதிலும் பாரிய சிக்கல்கள் ஏற்படும். எனவே அரசாங்கம் மேற் குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளும் அதே வேளை, நாட்டின் பொருளாதாரநிலை தொடர்பில் பாராளு மன்றத்தில் விவாதிப்பதற்கு நாளொன்றை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்து கின்றேன்-என்றுள்ளது.

இதேவேளை , “டொலர், கைவசம் இன்மையால், கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருக்கும் எரிபொருள் அடங்கிய கப்பலும் சிக்கிக்கொண்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடன் வந்திருக்கும் அந்தக் கப்பலுக்கு டொலரை செலுத்தாவிடின், எரிபொருள்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.