சமூவலைத்தளங்களில் தமிழர்களின் வரலாற்று அழிப்புக்கெதிரான ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு!




Google,Facebook, you tube   போன்ற சமூகவலைத் தளங்களில் தமிழர்களின் அடையாளங்களை குறிப்பாக தமிழின அழிப்பு தமிழர் இறையாண்மை மற்றும் வரலாறு  பற்றிய பதிவுகள் அனைத்தும் தொடர்ந்து திட்டமிட்டு நீக்கப்படுவதவதை தொடர்ந்து சுவிற்சர்லாந்தை தளமாக கொண்டியங்கும் உலகத் தமிழர் இயக்கம் அதனுடன் இணைந்து மனித உரிமைகள் தளத்தில் செயற்படும் ஐ.நா வின் அங்கீகாரம்பெற்ற 34 அமைப்புக்களின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 47வது கூட்டத்தொடரில் எழுத்துமூல அறிக்கையூடாக சமூக வலைத்தளத்தில் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை கண்டித்து முறைப்பாட்டு அறிக்கையாக சமர்ப்பித்திருந்தது. 


அதன் விளைவாக ஐ.நா வின் கருத்து மற்றும் கருத்து சுதந்திரத்தின் ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த சிறப்பு பிரதிநிதி இரன் கான் ( Ms.Irene Khan, Special Rapporteur on freedom of opinion and expression) மற்றும் கலாச்சார உரிமைகள் துறைசார்ந்த சிறப்பு பிரதிநிதி கரீமா பெனூன் (Ms Karima Bennoune : Special Rapporteur in the field of cultural rights) ஆகியோரினால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனையடுத்து உலகத் தமிழர் இயக்கத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தி மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொண்டதுடன் இவ்விடயத்தினை வரும் ஒக்டோபர் மாதத்தில் ஐ.நா பொதுச்சபைக்கு எடுத்துச்சென்று விவாதிக்க உள்ளதாகவும் அதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் பாதிப்புக்குள்ளான தமிழர்கள் அனைவரையும் முறைப்பாடுகளை பெற்று தமக்கு அனுப்பிவைக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.


அதன்படி உங்களது முறைப்பாட்டு அறிக்கைகளை காத்திரமாக பதிவுசெய்யும் பொருட்டு தமிழ் அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள்,நிறுவனங்கள் உங்கள் முறைப்பாட்டு அறிக்கைகளினை உங்கள்

அதிகாரபூர்வ கடித்தத்தலைப்பில் (Official Letterhead) பதிவுசெய்து 

Tamils.movement.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 20 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கும்படி அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம். 


அத்துடன் இவ் அறிக்கை Facebook நிர்வாகத்தினருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது அதனையடுத்து உலகத் தமிழர் இயக்கத்தினருடன் தொடர்புகொண்ட அவர்கள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்துவிட்டு மீண்டும் தொடர்புக்கு வருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.


தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறையை தகர்ப்பதற்கு தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.