சுனாமி  போது சேகரிக்கப்பட்ட 83 மில்லியன்  பணத்தை  மோசடி செய்த   பசில் ராஜபக்சே இருக்கிறார்!

 


திரு பசில் ராஜபக்சே அவர்களை நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்ப்பன அமைச்சு ஒன்றின் அமைச்சராக நியமிப்பதன் மூலம் இலங்கை எதிர் கொண்டு நிற்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும் என சில ஒட்டுக்குழுக்கள் கதை சொல்லி வருகின்றார்கள்

 ஆனால் மகிந்த ராஜபக்சே யுகத்தில் பொருளாதார விவகார அமைச்சராக இருந்த திரு பசில் ராஜபக்சே அவர்கள் இலங்கை அரசுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை திருடியதை தவிர எதையும் சாதிக்க வில்லை குறிப்பாக, சுனாமி பேரனார்த்தத்தின் பொது சேகரிக்கப்பட்ட 83 மில்லியன் (approx 820,000 US dollars) பணத்தை தனது சொந்த கணக்குகளுக்கு மாற்றிய மோசடிகளின் சூத்திரதாரியாக திரு பசில் ராஜபக்சே இருக்கிறார் சட்டவிரோத பணபரிமாற்றத்தின் (Money Laundering) மூலம் மல்வானை பகுதியில் 208 மில்லியன் ரூபா பெறுமதியான 64 ஏக்கர் நிலப்பரப்பில் சொகுசு பங்களா, நீச்சல் தடாகம் மற்றும் பண்ணை என்பவற்றை சொந்தமாக்கிய சம்பவங்களுடனும் திரு பசில் ராஜபக்சே தொடர்புபட்டு இருக்கிறார்

 திவிநெகும அபிவிருத்தி திணைக்களதிற்கு சொந்தமான ரூபா 2,991 மில்லியன் பணத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்செயல்களுடனும் திரு பசில் ராஜபக்சே தொடர்புபட்டு இருக்கிறார் அதே போன்று திவிநெகும அபிவிருத்தி திணைக்களதிற்கு சொந்தமான மற்றுமொரு 29.4 மில்லியன் அரச பணத்தை துஸ்பிரயோகம் செய்து

 5 மில்லியன் பஞ்சாங்கங்களை அச்சிட்டு அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திய குற்றங்களின் பின்னணியிலும் திரு பசில் ராஜபக்சே இருக்கிறார் இதே போல சுயவிருப்பின் பேரில் ஓய்வு பெற்ற 1,067 சமுர்த்தி அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட 1,700 மில்லியன் அரச நிதி கொடுப்பனவில் நடந்த மோசடிகளுடனும் திரு பசில் ராஜபக்சே தொடர்பு பட்டு இருக்கிறார் சட்டவிரோத பணபரிமாற்றம் (Money Laundering) ஒன்றின் மூலம் கம்பஹா மாவட்டம் Oruthota பகுதியில் 10 மில்லியன் பெறுமதியான நிலம் ஒன்றை கொள்வனவு செய்த மோசடிகளுடனும் திரு பசில் ராஜபக்சே தொடர்பு பட்டு இருக்கிறார் சட்டவிரோத பணப்பரிமாற்றம் (Money Laundering) மூலம் மாத்தறை மாவட்டம் Brown Hill பகுதியில் 64 மில்லியன் பெறுமதியான 18 ஏக்கர் நிலம் ஒன்றை வாங்கிய குற்றச்செயல்களின் பின்னணியிலும் திரு பசில் ராஜபக்சே இருக்கிறார் நாட்டில் உள்ள 158 பிரதேச சபைகளுக்கு வழங்குவதற்க்கென 35 மில்லியன் பெறுமதியில் வாங்கப்பட்ட GI Pipes தொடர்பான அரச நிதி துஸ்பிரயோக குற்றங்களுடனும் திரு பசில் ராஜபக்சே தொடர்புபட்டு இருக்கிறார் இது தவிர, மட்டக்களப்பு மாவட்டம் பாசிக்குடா பகுதியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை (Money Laundering) மூலம் சுற்றுல்லா அபிவிருத்தி என்கிற பெயரில் பல ஏக்கர் நிலம் மற்றும் உல்லாச விடுதிகளை திரு பசில் ராஜபக்சே சொந்தமாக்கி இருக்கிறார் இது போதாதென்று கிழக்கின் உதயம் , வடக்கின் வசந்தம், வீதி புனரமைப்பு திட்டங்கள் உட்பட சகல அரச பொருளாதார நிகழ்ச்சி திட்டங்களிலும் பசில் ராஜபக்சே மோசடி செய்து இருக்கிறார். 

 அதே போல 2007,நவம்பர் 16ம் திகதி பாராளமன்றத்தில் நடைபெற்ற பாதீடு மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களை கலந்து கொள்ள விடமால் தடுப்பதற்காக அவர்களின் உறவினர்களை பிள்ளையான் குழு மூலம் கடத்திய கோர சம்பவத்தின் பின்னணியிலும் திரு பசில் ராஜபக்சே அவர்களே செயல்ப்பட்டு இருந்தார்

 மேற்குறித்த சாதனைகளை தவிர ஒரு நாட்டின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களை கையாள கூடிய கல்வி தகுதியோ (Academic Background) அல்லது தொழில் தகுதியோ (Professional Qualification) அல்லது அனுபவமோ (professional Experience) அல்லது Values என எதுவும் திரு பசில் ராஜபக்சே அவர்களிடம் கிடையாது Once a criminal, always a criminal என சொல்லுவார்கள் . திரு பசில் ராஜபக்சே அவர்களுக்கு இது மிக பொருத்தம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.