யாழ். குடாநாட்டில் படையினரின் பிடியில் தற்போது 4 ஆயிரம் ஏக்கர் வரையான நிலம்

 


வலிகாமம் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் ஒரு தொகுதி நிலம் அடுத்த மாதம் அளவில் விடுவிக்கப்படகூடிய நிலைமை இருப்பதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதற்கான முழு முயற்சிகளையும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடற்றொழில் அமைச்சரும் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சத்தம் சந்தடியின்றி மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

 கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து பேசினார் அதற்குப் பின்னரே காணி விடுவிப்பு முயற்சியை அவர் துரிதப்படுத்தி இருக்கிறார். 

 கொழும்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இவ்விடயம் குறித்து தீவிரமான பேச்சுக்களை நடத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடுத்த வரும் நாட்களில் முழு விபரமான வரைபடங்கள் மற்றும் ஆவணங்களோடு ஜனாதிபதியை சந்தித்து விளக்கம் அளித்து தமது திட்டத்துக்கு அனுமதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 யாழ். குடாநாட்டில் படையினரின் பிடியில் தற்போது 4 ஆயிரம் ஏக்கர் வரையான நிலம் உள்ளது. இதில் வலிகாமம் வடக்கில் மட்டும் 3457 ஏக்கர் நிலம் படையினர்வசம் உள்ளது இவ்வாறு உள்ள 3457 ஏக்கர் நிலத்தில் 400 ஏக்கர் 1958ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் உள்ளமை கண்டுகொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு படையினர் வசமுள்ள நிலங்களில் கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் விடுவிப்பதற்கு பல இடங்கள் இனங்காணப்பட்டதோடு கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் 40 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டதாக உரிமையாளருக்கு ஆளுநர் மூலம் சான்றிதழ் வழங் சர்வதேசத்துக்கு காட்டப்பட்டது. பலாலி வீதி கிழக்கு திசையில் படையினர் வசமுள்ள 689 ஏக்கர் நிலத்தில் 647 ஏக்கரும் மயிலிட்டி துறைமுகத்தை சூழ மீனவர்கள் வாழ்ந்த கிராமத்தின் 150 ஏக்கர் நிலமும் விடுவிக்கப்பட இணக்கம் காணப்பட்டபோதும் இந்த பணிகள் பின்னர் தடைபட்டன. 

இவ்வாறு முன்னர் விடுவிக்க இனங்காணப்பட்ட பகுதியை அல்லது குறிப்பிட்ட அளவினையை ஏதும் இப்போது விடுவிக்க அரசு திட்டமிடுவதோடு இதற்கான முன் ஆயத்த பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.