வாகனங்கள் மோதியதில் விபத்து!!


 நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனம் ஒன்றுடன் எரிபொருள் பவுஸர் ஒன்று மோதியதில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை பாதெனிய - அனுராபுரம் வீதியின் அம்பகஸ்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 5 இராணுவத்தினர் மஹவ மற்றும் குருணாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் விஷ்வமடு இராணுவ முகாம்களில் இருந்து 7 இராணுவத்தினரை அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பவுஸர் ஓட்டுனரின் தூக்க கலக்கம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் பவுஸர் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.